கோடிக்கணக்கில் மதிப்பிலான நகைகள் திட்டம் போட்டு கொள்ளை! லண்டனில் சிக்கிய இந்திய தம்பதி... அதிரவைக்கும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

தென் ஆப்பிரிக்காவின் டுர்பனில் உள்ள பெரிய கடையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை திருடிவிட்டு தலைமறைவாக இருந்த தம்பதியை லண்டனில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த முகமதி பிலால் (37) என்ற ஆணும் ஜகிடா ரஹமான் (42) என்ற பெண்ணும் கடந்த 2013ல் டுர்பனில் உள்ள பெரிய நகைகடையில் கோடிக்கணக்கிலான நகைகளை திருடியுள்ளனர்.

ஜகிடா தான் திருடிய நகைக்கடையிலேயே பணிபுரிந்து வந்ததும், திட்டம் போட்டு சிசிடிவி கமெராவை செயலிழக்க வைத்து இரவு நேரத்தில் திருடியதும் தெரியவந்தது.

பின்னர் சொகுசாக வாழ்ந்த அவர்களை பொலிசார் கைது செய்தனர்.

ஜிகிடாவுக்கு வேறு நபருடன் ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில் பிலாலுடன் தொடர்பு வைத்து கொண்டு அவருடன் மனைவியாக வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரிந்தது.

பின்னர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் இருவரும் அடிக்கடி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 2018 விசாரணையின் போது இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

தம்பதிக்கு உதவிய ஹீசன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிழக்கு லண்டனில் ஜிகிடாவும், பிலாலும் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

இது குறித்து லண்டன் பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் திங்கட்கிழமை இருவரையும் லண்டன் பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளார்கள்.

இதையடுத்து விரைவில் இருவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்