அவளை சிறுமியாக பார்த்தது... அவளுக்கு இப்படி ஒரு மரணமா?: அரத்தால் அறுக்கப்பட்டு துண்டுகளாக்கப்பட்ட பெண்ணின் அத்தை கண்ணீர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

துண்டுகளாக இரண்டு சூட்கேஸ்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இளம் பெண்ணின் அத்தை, அவளை சிறுமியாக பார்த்தது, அவளுக்கு இப்படி ஒரு மரணமா என கண்ணீர் விட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Birmingham பகுதிக்கு வெளியே அமைந்துள்ள Forest of Dean என்ற வனப்பகுதிக்கருகே தாறுமாறாக ஓடிய ஒரு கார் குறித்து பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர்.

அப்போது குறிப்பிட்ட கார் அங்கு வர, பொலிசார் அதை சோதனையிட்டுள்ளனர். அப்போது அந்த காரிலிருந்து துர்நாற்றம் வீசவே, பொலிசார் காருக்குள் பார்த்தபோது இரண்டு சூட்கேஸ்கள் இருப்பதைக் கண்டுள்ளனர்.

அந்த சூட்கேஸ்களை திறந்தபோது பார்பிக்யூ செய்யப்பட்டது போன்ற உடல் பாகங்கள் அதற்குள் இருந்துள்ளன.

விசாரணையில், அந்த உடல் பாகங்கள் Birminghamஇல் பெண்கள் மட்டும் தங்கும் வீடு ஒன்றில் தங்கியிருந்த Phoenix Netts (28) என்ற பெண்ணுடையவை என்பது தெரியவந்தது. மேலும், Forest of Dean பகுதியில் சில உடல் பாகங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர் விசாரணையில், Phoenix தங்கியிருந்த அதே விடுதியில் தங்கியிருந்த, Gareeca Gordon (27) என்ற ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த மற்றொரு இளம்பெண்தான் Phoenixஐ கொலை செய்தது தெரியவந்தது.

இறந்த Phoenixஇன் உடலை அரம் ஒன்றால் அறுத்து அந்த துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக Forest of Dean பகுதியில் கொண்டு போட்டு வந்துள்ளார் Gordon.

Gordonக்கு உதவியாக கார் ஓட்டியுள்ளார் Mahesh Sorithaya (38) என்பவர். அப்படி ஒரு நாள் சில உடல் பாகங்களை கொண்டு வீசுவதற்காக செல்லும்போதுதான் Gordon மற்றும் Mahesh இருவரும் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், Phoenixஇன் கோர முடிவு குறித்து அவரது குடும்பத்துக்கு தெரியவர, அவர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Phoenixஐ சிறு வயதாக இருக்கும்போது பார்த்த அத்தையான Ana-Liliana Netts (55), Phoenix மிக இனிமையான ஒரு பெண், அவளுக்கு இப்படி ஒரு கோர முடிவா என கண்ணீர் விடுகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்