உலகப் புகழ்பெற்ற பிரித்தானியாவின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு நேர்ந்த நிலை! வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக உலகப் புகழ்பெற்ற பிரித்தானியாவின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஜெட் விமான எஞ்சின் தயாரிப்பாளரான ரோல்ஸ் ராய்ஸ் தனது 52,000 ஊழியர்களில் குறைந்தது 9,000 பேரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

தொற்றுநோயால் ஏற்படும் விமான பயணத்தின் வீழ்ச்சியை சமாளிக்க முற்படுவதால், 1.3 பில்லியன் பவுண்டுகள் வருடாந்திர செலவு சேமிப்பு செய்ய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது..

வாடிக்கையாளர்களின் புதிய தேவைக்கு ஏற்ப எங்கள் வணிகத்தில் முக்கிய மறுசீரமைப்பு செய்கிறோம் என்று தலைமை நிர்வாகி வாரன் ஈஸ்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதன் விளைவாக, எங்கள் உலகளாவிய தொழிலாளர்கள் 52,000 பேரில் 9,000 பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைகளைத் தொடங்கிய நிலையில், வேலை இழப்புகள் பெரும்பாலும் அதன் உள்ளூர் தயாரிப்பு வணிகத்தில் நிகழும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்