லண்டனில் இருந்து வரும் மகிழச்சி தரும் செய்தி... ஊரடங்கு தளர்த்தப்படலாம்! உருவான நம்பிக்கை

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படாததால், ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் 248,818-பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 35-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக நாட்டில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக ஊரடங்கில் சில விதிமுறைகள் போரிஸ் ஜான்சன் தளர்த்தி வரும் நிலையில், அடுத்த மாதம் வரை ஊரடங்கு நீடிக்கும் என்று தெரிவித்தார்.

thesun

இந்நிலையில், பிரித்தானியாவில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான லண்டனில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை, கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் முதல் முறையாக லண்டனில் கொரோனா பாதிப்பு இல்லை.

பொது சுகாதார இங்கிலாந்து நேற்று வெளியிட்ட தகவல்களின்படி, திங்களன்று புதிய வழக்குகள் எதுவும் லண்டனில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

thesun

ஆனால் பொது சுகாதார இங்கிலாந்து தலைவர்கள், இந்த புள்ளி விவரங்களை வைத்து சாதரணமாக நினைத்துவிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

அதே சமயம், சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், இது தொற்று நோய் குறைகிறது என்பதற்கான அர்த்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு மற்றும் சனிக்கிழமைகளில் 19 பேர் பாதிக்கப்பட்டனர், வியாழக்கிழமை 77 பேரும், வெள்ளிக்கிழமை 53 பேரும் பாதிக்கப்பட்டனர். தலைநகரில் மட்டும் கொரோனா காரணமாக 5806 பேர் மருத்துவமனையில் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Credit: AFP or licensors

ஆனால், தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலம் கடந்த 13-ஆம் திகதி வரை 5,903 இறப்புகள் லண்டனில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என்றால் அதற்கு ஐந்து சோதனைகளில் தெரிவு பெற வேண்டும் என்று அரசு தெரிவித்திருந்தது. அதில் முக்கியமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் குறைவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போன்று தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட லண்டனில் கொரோனா பாதிப்பு இல்லாததால், ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கான நம்பிக்கை உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்