இந்தப் பிரச்சனை இருக்கிறதா? முகக்கவசம் வேண்டாம்: பிரித்தானிய நிபுணர்கள் அறிவுரை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஆஸ்துமா அல்லது வேறு நுரையீரல் பிரச்சினைகள் இருப்பவர்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்க்குமாறும் இதன் மூலம் சுவாசிப்பது கடினமாகிவிடும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் கடந்த வாரத்தில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், இரண்டு மீற்றர் தொலைவு தள்ளியிருக்க முடியாதவர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அரசு அறிவுறுத்தியிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களைப் பாதிக்கக்கூடிய தொற்றுகள் பரவாமல் தடுத்து நிறுத்தி கொரோனா வைரஸ் பரவலை முகக்கவசங்களால் தடுக்க முடியும். அணிந்திருப்பவர்களுக்குத் தொற்றாமல் முகக்கவசங்களால் தடுக்க இயலாது. ஆனால் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும்.

ஆஸ்துமா பிரச்சினையுள்ள சிலருக்கு முகக்கவசம் அணிந்திருப்பது சிரமமாக இருக்கும், சுவாசிப்பது கஷ்டமாக இருக்கும்.

அத்தகைய பிரச்சினையிருப்போர் முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டியதில்லை என்று ஆஸ்துமா தொடர்பான நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது - எனவே முகக் கவசம் அணிவதை நீங்கள் கடினமாக உணர்ண்டால், அதை அணிய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்