பிரித்தானிய பிரதமருக்கு லண்டனில் இருக்கும் சிரிய அகதி வேதனையுடன் வெளியிட்ட வீடியோ!

Report Print Santhan in பிரித்தானியா

சிரியா அகதியிடமிருந்து, உணர்ச்சிவசப்பட்ட வேண்டுகோளுக்குப் பிறகு, பிரித்தானியா அரசு என்.எச்.எஸ் ஊழியர்களுக்கான கொரோனா திட்டத்தை விரிவுபடுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவை சேர்ந்தவர் Hassan Akkad(32). திரைப்பட தயாரிப்பாளரான இவர், கடந்த 2015-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரித்தானியாவிற்கு அகதியாக வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் லண்டனில் இருக்கும் Whipps Cross மருத்துவமனையில், இந்த கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட அவர், அங்கு துப்புரவு பணியாளராக, கொரோனா வார்டில் கிருமி நீக்கம் பணியை செய்து வருகிறார்.

இந்நிலையில், NHS இறப்புத் திட்டத்தில் இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தடைசெய்யப்படுவது. துப்புரவாளர்கள், சுகாதார சேவையைப் பயன்படுத்த பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது குறித்து இவர் மிகவும் வேதனையுடன் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.

அதில், இதை ரத்து செய்யுமாறு பிரதமர் போரிஸ் ஜான்சனை வலியுறுத்தினர். இதன் விளைவாக குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டு என்.எச்.எஸ் தொழிலாளர்களை கோவிட் -19 இறப்புத் திட்டத்திலிருந்து விலக்குவதற்கான முடிவை பிரித்தானிய அரசாங்கம் மாற்றியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Hassan Akkad பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வெளியிட்ட வீடியோவில், நீங்களும் அரசாங்கத்தில் உள்ள உங்கள் சக அமைச்சர்களும் ஒவ்வொரு வாரமும், என்.எச்.எஸ் ஊழியர்களின் செயலை பாராட்டி கைதட்டும் போது, நான் அதை ரசிக்கிறேன்.

ஆனால், குறைந்தபட்ச ஊதியத்தில் இருக்கும் துப்புரவாளர்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் தொழிலாளர்களாக பணிபுரியும் என்னையும் எனது சகாக்களையும் விலக்க நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள் என்பதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

நீங்கள் எங்களை குறிப்பிட்ட திட்டத்தில் இருந்து விலக்க முடிவு செய்துள்ளீர்கள். உங்களின் இந்த முடிவு முதுகில் குத்தப்பட்டது போன்று உணர்ந்தேன்.

இதனால்கொரோன வைரஸிற்கு எதிரான போரில் இருக்கும் போது, எங்களின் பங்குதாரர்களுக்கு காலவரையற்ற விடுப்பு அனுமதிக்கபடுவதில்லை. இது நான் நீங்கள் எங்களுக்கு சொல்லும் நன்றியா? தயவு செய்து இந்த தீட்டத்தை மாற்றுங்கள், பரிசீலனை செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலே, குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டு என்.எச்.எஸ் தொழிலாளர்களை கோவிட் -19 இறப்புத் திட்டத்திலிருந்து விலக்குவதற்கான முடிவை பிரித்தானிய அரசாங்கம் மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், உள்துறை செயலாளரான Priti Patel தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இறப்புத் திட்டத்தை என்.எச்.எஸ் ஆதரவு ஊழியர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு விரிவுபடுத்துகிறோம்.

இது மிகவும் சிக்கலான பிரச்சினை என்பதால் நாங்கள் வேகமாக செயல்படுகிறோம். இந்த துயரமான நேரத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான ஆதரவு இருக்கும் என்பது மட்டும் உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்