மேயராக இருக்கும்போது போரிஸ் ஜான்சன் தனது பதவியை தவறாக பயன்படுத்தவில்லை! ஆனால் அந்த பெண் குறித்த விடயம்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மேயராக இருந்தபோது ஒரு பெண்ணுக்காக தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு இருப்பது பலருக்கும் தெரியும்.

இந்த குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் நடத்தை அலுவலகம் எட்டு மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது.

தற்போது, போரிஸ் ஜான்சனுடன் திருமணத்துக்கு வெளியில் உறவு வைத்திருந்ததாக கூறப்படும் Jennifer Arcuri என்ற அந்த பெண்ணுக்கு, போரிஸ் மேயராக இருந்தபோது சிறப்பு சலுகை எதையும் அளிக்கவில்லை என்றும், ஆகவே போரிஸ் ஜான்சன் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்படாது என்றும் அந்த அலுவலகத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

என்றாலும் Jennifer Arcuriக்கும் போரிஸ் ஜான்சனுக்கும் அந்தரங்க உறவு இருந்தது என்பதற்கான ஆதாரம் உள்ளது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், போரிஸ் ஜான்சனோ அல்லது Arcuriயோ தங்களுக்கிடையில் அந்தரங்க உறவு இருந்ததை மறுத்ததில்லை என்பதுதான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்