லண்டனில் தன் உயிரை காப்பாற்றியவர்களுக்காக 6 வயது சிறுவன் செய்துள்ள நம்பமுடியாத செயல்! குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் குறைவான எடையுடன் பிறந்து incubator எனப்படும் அடைக்காக்கும் கருவியில் வைக்கப்பட்டிருந்த குழந்தை தற்போது சிறுவனாகி செய்துள்ள நம்பமுடியாத செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள கிங்ஸ்டன் மருத்துவமனையில் ஷார்ன் என்ற பெண்ணுக்கு திலான் மங்கு என்ற ஆண் குழந்தை ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தது.

திலான் குறைபிரசவத்தில் பிறந்த நிலையில் பிறக்கும் போது வெறும் ஒன்றரை கிலோ எடை தான் இருந்தான்.

இதையடுத்து திலானை மருத்துவர்கள் incubator எனப்படும் அடைக்காக்கும் கருவியில் சில மாதங்கள் வைத்திருந்த கண்காணித்து அவன் உயிரை காப்பாற்றினார்கள்.

இந்த நிலையில் திலான் வளர தொடங்கிய போது சில வருடங்களுக்கு முன்னர் அவனுக்கு தங்கை பிறந்தாள்.

ஆனால் அந்த பெண் குழந்தை incubator-ல் வைக்கப்படவில்லை.

இது குறித்து தாய் ஷார்னிடம் திலான் கேட்ட போது, நீ குறைப்பிரசவத்தில் பிறந்ததால் உன்னை அதில் வைத்து மருத்துவர்கள் காப்பாற்றினார்கள் என கூறினார்.

இதை கேட்ட திலான் தன் உயிரை காப்பாற்றி மருத்துவமனைக்கு நன்றி செலுத்த விரும்பினார்.

அதாவது incubator-ஐ மருத்துவமனைக்கு வாங்கி தர திலான் முடிவெடுத்தான்.

அதன்படி பல்வேறு வகையில் நிதி வசூலித்தும், நன்கொடை பெற்றும் £19,000 க்கும் அதிகமாக பணத்தை சேர்த்த 6 வயது திலான் மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுத்துள்ளான்.

அதை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட மருத்துவமனை நிர்வாகம் அந்த பணத்தை வைத்து புதிய incubator-ஐ வாங்கியுள்ளது.

கொரோனா சமயத்தில் குழந்தைகளை பாதுகாக்க அது பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதனிடையில் 6 வயது சிறுவன் திலானின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்