பிரித்தானியாவுக்கு வரும் பயணிகளைத்தேடி வீட்டுக்கு வரும் பொலிஸ்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் வரும் யாராக இருந்தாலும், அவர்கள் தனிமைப்படுத்தலை ஒழுங்காகப் பின்பற்றுகிறார்களா என்பதை கவனித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கே சென்று அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை ஒழுங்காகப் பின்பற்றுகிறார்களா என பொலிசார் சோதிக்க இருக்கிறார்கள்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள் என வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்கள் அனைத்திலும் கட்டாய தனிமைப்படுத்தல் திட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என அமைச்சர்கள் இன்று அழுத்தம் கொடுக்க இருக்கிறார்கள்.

இதனால் கோடை விடுமுறையை திட்டமிட்டுள்ள குடும்பங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்றாலும் திட்டத்தை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளார்கள் அமைச்சர்கள்.

கடுமையான கட்டுப்பாடுகளை செயல்படுத்த பொலிசாருக்கு அதிகாரம் வழங்குவதை சட்டமாக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.

விதிகளை மீறுவோருக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்க பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட இருப்பதோடு, அபராதத்தை செலுத்தாவிட்டால், கணக்கிலடங்கா அபராதங்களை மாஜிஸ்திரேட்கள் விதிக்க உள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வருவோரின் வீடுகளுக்கு அவ்வப்போது சென்று சோதிக்கும் அதிகாரமும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

நாளொன்றிற்கு 100 முறை வரை அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று spot check மேற்கொள்ளலாம்.

இந்த திட்டங்கள் ஜூன் ஆரம்பத்திலிருந்து அமுலுக்கு வர இருக்கின்றன. தனிமைப்படுத்துதலுக்கு ஒப்புக்கொள்ளாத வெளிநாட்டவர்களுக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.

இன்னொரு முக்கியமான விடயம், இந்த விதிகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று திரும்புபவர்களுக்கும் பொருந்தும். ட்ரக் சாரதிகளுக்கு மட்டுமே விதிகலிலிருந்து விலக்கு!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்