நாட்டிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவுக்கு வருகை தரும் சர்வதேச பயணிகள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தத் தவறினால், அவர்களுக்கு 1,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பிரித்தானியா அரசாங்கம் இதற்கான அறிவிப்பை விரையில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவின் புதிய தனிமைப்படுத்தல் திட்டத்தின் பகுதியாக, அனைத்து சர்வதேச பயணிகளும் தங்களை தொடர்பு கொள்ளும் தகவலுடன் படிவத்தை நிரப்புமாறு கேட்கப்படுவார்கள்.

விமானம், படகு அல்லது ரயில் மூலம் பிரித்தானியாவுக்கு வரும் எந்தவொரு பயணிகளும், அவர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்படும் முகவரியை நாட்டின் எல்லைப் படை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.

இல்லையெனில் தனிமைப்படுத்த தங்குமிடம் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும்.

இதன் விளைவாக, சர்வதேச பயணிகள் தனிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதைச் சரிபார்க்க சுகாதார அதிகாரிகள் தனியார் முகவரிகளில் உடனடி சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

புதிய விதிகள் அடுத்த மாதம் வரை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்