பிரித்தானியாவில் காணமல் போனதாக தேடப்பட்டு வந்த பின் பெண் சடலமாக கிடைத்தார்! வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா
248Shares

பிரித்தானியாவில் காணமல் போனதாக தேடப்பட்டு வந்த 16 வயது சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் முறையாக உடல் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களாக காணமல் போனதாக தேடப்பட்டு வந்த 16 வயது சிறுமி Louise Smith-ன் உடல் Hampshire-ன் Havant-ல் இருக்கும் வனப்பகுதியில் அதிகாரிகள் சடலமாக கண்டுபிடித்துள்ளனர்.

இன்னும் அவரது உடல் முறையாக அடையாளம் காணப்படவில்லை எனவும், அவரின் மரணம் சந்தேகத்திர்குறியதாக கருதப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Louise Smith காணமல் போனதில் இருந்து, இவர் கடத்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில், கடந்த 15-ஆம் திகதி 29 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

(Picture: Hampshire Police/Solent News)

துப்பறியும் தலைமை கண்காணிப்பாளர் Scott Mackechnie கூறுகையில், வியாழக்கிழமை Havant-ல் இருக்கும் வனப்பகுதியில், ஒரு உடலை கண்டுபிடித்தனர். இது ஒரு வருத்தமான சம்பவம் என்பதை நாங்கள் அறிவோம்.

எங்களால் முடிந்தவரை உடல் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து கூடுதல் விவரங்களை வழங்க முயற்சிப்போம். ஆனால் அதற்குள் இதைப் பற்றி எதையும் ஊகிக்க வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விசாரணைக்கு எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Louise Smith கடைசியாக கடந்த 8-ஆம் திகதி தனது சொந்த ஊரான Somborne Drive-ல் காணப்பட்டார். தான் விரைவில் திரும்பி வருவேன் என்று நண்பர்களிடம் கூறி விட்டு, சென்றுள்ளார்.

(Picture: Eddie Mitchell)

நண்பர்களும், அவர் வாரத்தின் இறுதி நாட்களை தன் காதலனுடன் கழிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் திரும்பி வரவில்லை. இறுதியாக Louise Smith கடந்த 7-ஆம் திகதி Greywell சாலையில் இருக்கும் Tesco store-ல் பொதுவெளியில் தென்பட்டுள்ளார்.

அது தொடர்பான சிசிடிவி புகைப்படங்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்