கொரோனா அறிகுறி இருந்தபோது ஊரடங்கை மீறி வெளியூர் பயணம்! நெருக்கடியில் பிரித்தானியா பிரதமரின் தலைமை ஆலோசகர்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா பிரதமரின் தலைமை ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ், ஊரடங்கு விதிகளை மீறியதாக கண்டறியப்பட்டால், அவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரியுள்ளனர்.

கொரோனா அறிகுறிகள் இருந்தபோது கம்மிங்ஸ் லண்டனில் இருந்து டர்ஹாமிற்கு 250 மைல் பயணம் செய்தார்.

உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவரும் அவரது மனைவியும் பெற்றோரின் வீட்டில் தங்கியிருந்தனர்.

கம்மிங்ஸின் நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா அரசாங்கம் துரிதமான விளக்கத்தை வழங்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கம்மிங்ஸ் கொரோனா வைரஸ் விதிகளை மீறுவதை அவருக்கு நெருக்கமான வட்டாரம் மறுத்தது, தம்பதியருக்கு குழந்தை பராமரிப்பு உதவி தேவை என்றும், அவர்கள் கம்மிங்ஸ் மற்றும் அவரது மனைவியும் தனி கட்டிடத்தில் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

செய்தித்தாள்களில் கம்மிங்ஸ் குறித்த செய்தி வெளியான பின்னர் பிரித்தானியா அரசாங்கம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்