இரவில் தூங்க முடியவில்லை! லண்டனில் பெண் பேருந்து ஓட்டுனருக்கு நடந்த திகில் சம்பவம்: வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் இரவு பேருந்து பெண் ஓட்டுனர் மீது மர்ம நபர் எச்சில் துப்பியதோடு பேருந்து கண்ணாடியையும் உடைக்க முயன்ற சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய லண்டனில் உள்ள பேக்கர் தெரு அருகில் தான் இந்த சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஓட்டுனர் Sureyya Allam கூறுகையில், மூன்று நபர்கள் பேருந்தை வழிமறித்து முன்பக்க கண்ணாடியை உடைக்க முயன்று அதன் மீது எச்சில் துப்பினார்கள்.

பின்னர் அதில் ஒருவன் என் மீது எச்சில் துப்பிவிட்டு, எனக்கு கொரோனா வைரஸ் உள்ளது, உனக்கும் அதை நான் கொடுக்க போகிறேன் என கூறினான்.

அவர்கள் கண்ணாடியை உடைத்திருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும்? பேருந்துக்கு முன்னால் ஒருவன் நின்றதால் என்னால் பேருந்தை இயக்க முடியவில்லை.

இது திகிலாக எனக்கு இருந்தது, எனக்கு கொரோனா பாதிப்பு வந்துவிடுமோ என பயமாக உள்ளது.

சம்பவம் நடந்த பின்னர் என்னால் தூங்க முடியவில்லை என கூறியுள்ளார்.

இதனிடையில் Sureyya கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் முடிவு திங்கட்கிழமை வரவுள்ளது.

இது குறித்து Transport for London வெளியிட்ட அறிக்கையில், இந்த அருவருப்பான சம்பவத்தைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.

எல்லோரும் மரியாதையுடன் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள், குறிப்பாக எச்சில் துப்புதல் என்பது மோசமான தாக்குதலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்