கொரோனா விதிகளை மீறினாரா பிரித்தானியா பிரதமரின் தலைமை ஆலோசகர்? உண்மையை விளக்கிய டவுனிங் ஸ்ட்ரீட்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா பிரதமரின் தலைமை ஆலோசகர் கொரோனா விதிகளை மீறியதாக கண்டறியப்பட்டால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பிரதமரின் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தனது குடும்ப வீட்டிற்குச் சென்றபோது எந்த விதிகளையும் மீறவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விவகாரம் தொடர்பில் பிரித்தானியா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை, கம்மிங்ஸின் மனைவி சந்தேகத்திற்குரிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அவர் உடல்நிலை சரியில்லாமல் போவதற்கான அதிக வாய்ப்புகள் காரணமாகவும், டொமினிக் கம்மிங்ஸ் தனது குழந்தையை சரியாக கவனித்துக்கொள்வதை உறுதி செய்வது அவசியமாக இருந்தது.

அவரது சகோதரி மற்றும் மருமகள் உதவி செய்ய முன்வந்தனர், எனவே வீட்டிற்குச் சென்றார்.

ஆனால் அவர்களின் உதவி தேவைப்படும் பட்சத்தில் அவரது குடும்பத்திலிருந்து விலகி அருகிலுள்ள மற்றொரு வீட்டில் தங்கினார்.

அவரது சகோதரி குடும்பத்திற்காக ஷாப்பிங் செய்து எல்லாவற்றையும் கம்மிங்ஸ் வீட்டிற்கு வெளியே வைத்து விடுவார்.

எந்தவொரு கட்டத்திலும் அவர் அல்லது அவரது குடும்பத்தினர் இந்த விவகாரம் குறித்து காவல்துறையினரிடம் தெரிவிக்கவில்லை.

அவரது நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களின்படி இருந்தன. அவர் நியாயமானதாகவும் சட்டரீதியாகவும் நடந்து கொண்டார் என்று கம்மிங்கஸ் நம்புகிறார் என பிரித்தானியா பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்