மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி: பிரித்தானிய நிபுணரின் கருத்தால் ஏமாற்றம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை வெற்றிக்கு 50 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது என அதன் முன்னணி நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் கொரோனா தொற்றானது நோயாளிகளில் மிக விரைவாக மறைந்து வருவதே முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நம்பிக்கைக்குரிய நகர்வுகள் காரணமாக நாட்டின் பெரிய மருந்து நிறுவனம் ஒன்று தாங்கள் ஒரு பில்லியன் வரையான அளவு மருந்தை தயாரிக்க தயாராக இருப்பதாக ஒரு நாளுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

மட்டுமின்றி பிரித்தானிய அரசும் முதற்கட்டமாக 100 மில்லியன் அளவில் மருந்தை தங்களுக்கு அளிக்குமாறு ஒப்பந்தம் ஒன்றும் மேற்கொண்டிருந்தது.

மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மூன்றில் ஒருபங்கு தயார் நிலையில் எட்டினால், பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்ப முடியும் எனவும்,

தொழில்துறைக்கு பச்சை விளக்கு காட்டலாம் எனவும் அமைச்சர்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மிக விரைவாக காணாமல் போவது நான்கு மாத காலக்கெடுவை எதிர்கொள்ளும் தங்கள் அணியின் திறனைப் பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதன்மை நிபுணர் Adrian Hill தெரிவித்துள்ளார்.

சமூக பரவகை கொரோனா ஏற்படுத்த தவறினால், நிபுணர்களால் குறித்த தடுப்பூசி நோயாளிகளில் என்ன மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்க முடியாமல் போகும் என்றார்.

வரவிருக்கும் வாரங்களில் தடுப்பூசியை சோதிக்க சுமார் 10,000 பேர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பேராசிரியர் ஹில் கூறுகையில்,

அவர்களில் 50 க்கும் குறைவானவர்கள் கொரோனாவுக்கு இலக்காவார்கள் என்று தான் எதிர்பார்க்கிறேன், மேலும் 20 க்கும் குறைவான சோதனை நேர்மறை முடிவுகளாக இருந்தால் இந்த மருந்து பயனற்றவை என்று கருதலாம் என்றார்.

கொரோனா பரவல் இன்னும் சில காலம் பிரித்தானியாவில் நீடித்தால் மட்டுமே, தங்களால் சக்தி வாய்ந்த மருந்து ஒன்றை உருவாக்க முடியும் எனவும்,

தற்போதைய சூழலில் வெறும் 50 சதவீத வாய்ப்புகளே உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்