கடந்த 24 மணி நேரத்தில் 421 பேர் மரணம்: நோய் பரப்புவதாக மருத்துவ ஊழியரை சாடிய பிரித்தானிய பெண்மணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த முடிவு செய்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டு 412 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் இறந்துள்ளனர்.

பிரித்தானியாவில் ஊரடங்கை படிப்படியாக தள்ர்த்த போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா சிகிச்சையில் இருந்த 412 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனை மற்றும் முதியோர் காப்பகங்களில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,460 என பதிவாகியுள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு ரெமெடிசிவிர் மருந்து வழங்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா தொற்றுக்காக உருவாக்கப்பட்ட இந்த மருந்தானது, தற்போது பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில நோயாளிகளுக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளனர். இதனிடையே மருத்துவ ஊழியர் ஒருவர் தமது மருத்துவமனை சீருடையுடன், பல்பொருள் அங்காடி ஒன்றில் சென்றுள்ளார்.

அவரை பொதுமக்களில் ஒருவர், கடுமையாக திட்டியதுடன், கொரோனா பரவுவதே இதுபோன்றவர்களால் தான் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால் குறித்த மருத்துவ ஊழியர் கண்ணீருடன், உணவுப் பொருட்கள் ஏதும் வாங்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

திங்களன்று நடந்த இச்சம்பவம் பலரது கவனத்தை ஈர்க்கவே, மருத்துவ ஊழியர் மீது சாடிய அந்த பெண்மணி, இதேப்போன்று மருத்துவ ஊழியர்களை அவர்களின் சீருடையுடன் பொதுமக்கள் புழங்கும் இடத்தில் காண நேர்ந்தால் கண்டிப்பாக திட்டுவேன் என தமது செயலை ஆதரித்து பேசியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்