எனக்காக இதை மட்டும் செய்யுங்கள்: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய இளம்பெண் கோரிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய இளம்பெண் ஒருவர், எஞ்சிய பெண்கள் அனைவரும் நோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

லிவர்பூல் பகுதியில் வசித்துவரும் 24 வயதேயான ஜோர்ஜியா டே என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் மாரபக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஜோர்ஜியா டே, தற்போது கொரோனா ஊரடங்கால் தமது தாயாரை சந்தித்து, தமது நிலை குறித்து பகிர்ந்து கொள்ளவும் முடியாத சூழலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் இந்த விவகாரத்தை தமது தாயாருடன் பகிர்ந்து கொண்ட நிமிடங்கள் உண்மையில் நெஞ்சை நொறுக்குவதாக இருந்தது என்கிறார் ஜோர்ஜியா.

ஜோர்ஜியாவுக்கு 21 வயதாக இருக்கும்போதே, மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோர்ஜியாவுக்கு இருந்த அந்த மரபணுவானது அவரது தாயாருக்கும், சகோதரிக்கும், பாட்டிக்கும் இருந்துள்ளது. அவர்களும் மார்பக புற்றுநோயால் அவதிக்கு உள்ளானவர்களே.

தமது குடும்பத்தாருக்கு இந்த நிலை இருப்பதால் தாம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இதுநாள் வரை இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இளம்பெண்கள் கண்டிப்பாக மாரபகத்தில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களை நாட தயக்கம் காட்ட வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்