காதலியை மூர்க்கத்தனமாக கொன்ற பிரித்தானியர் சிறையில் இருந்து விடுதலை: கலக்கத்தில் குடும்பம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

முன்னாள் காதலியை கத்தியால் 50 முறை கொடூரமாக தாக்கி கொலை செய்த பிரித்தானியர் 11 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்தைச் சேர்ந்த 20 வயதான அவ்ரில் ஃபிளனகன் என்பவரை ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள தமது குடியிருப்பில் வைத்து கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்த வழக்கில் ஆலன் டால்பி என்ற பிரித்தானியர் குற்றவாளி என கண்டறியப்பட்டார்.

ஆலனுடனான உறவை அவ்ரில் ஃபிளனகன் முறித்துக் கொண்ட இரண்டாவது வாரத்தில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது.

அவ்ரில் ஃபிளனகனை தமது குடியிருப்பில் வரவழைத்த ஆலன், திட்டமிட்டு அவரை கொலை செய்துள்ளார். அவரது கழுத்தை கத்தியால் காயப்படுத்திய ஆலன்,

அவ்ரிலின் உடல் முழுவதும் தமது ஆத்திரம் அடங்க 50 முறை கத்தியால் குத்தியுள்ளார், அது தமக்கு மன நிறைவை அளித்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

அவ்ரில் ஃபிளனகனின் சடலமானது சம்பவம் நடந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னரே ஆலனின் கோஸ்டா பிளாங்கா குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்டது.

கொலை நடந்த பின்னர் சுமார் 3 மணி நேரம் செலவிட்டு, மொத்த அடையாளங்களையும் அழித்துள்ளார் ஆலன் டால்பி.

பின்னர் அவ்ரிலின் சடலத்தை அப்புறப்படுத்த முயன்று ஏமாந்த நிலையில், பிளாஸ்டிக் போர்வையால் சுற்றப்பட்டு, அதை தமது படுக்கையின் அடியில் மறைவு செய்தார்.

இதை அவ்ரிலின் தாயாரே கண்டுபிடித்துள்ளார். தமது மகளை மூர்க்கத்தனமாக கொன்ற அந்த கொலைகாரன், ஸ்பெயின் நாட்டின் அதிகபட்ச தண்டனை காலமான 19 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிப்பார் என நம்பி நிம்மதி கொண்டார்.

ஆனால் தற்போது நிபந்தனையின் கீழ் எதிர்வரும் அக்டோபர் மாதம் ஆலன் விடுக்கப்படுவதாக வெளியான தகவல் தம்மை உலுக்கியுள்ளதாகவும், ஏமாற்றப்பட்டதாகவும் கருதுவதாக அவ்ரிலின் தாயார் பார்பரா தெரிவித்துள்ளார்.

விசாரணை நிமித்தம் சிறையில் இருந்த காலகட்டத்தையும் கருத்தில் கொண்டு தற்போது 11 ஆண்டுகளில் ஆலன் விடுவிக்கப்படுவதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்