பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை... திங்கட் கிழமைக்கு முன்னர் வரை மீறினால் அபராதம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வரும் திங்கட் கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அதற்கு முன்னர் வரை பழைய விதிகளே இருக்கும், மீறினால் அபராதம் விதிக்கப்படலாம் என்று பொலிசார் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் தற்போது வரை 272,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 38,376 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் ஊரடங்கில் அவ்வப்போது சில தளர்வுகள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் இன்று அரசு ஆறு பேர் கொண்ட குழுக்கள் திங்கள்கிழமை முதல் ஒன்றாக உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ஆனால் இரண்டு மீற்றர் இடைவெளி தேவை என்று கூறியுள்ளது.

இதற்கு முன்னர் குடும்பத்தை சேர்ந்த ஒருவருடன் மட்டுமே பொதுவெளியில் சந்திக்கவும், இரண்டு மீற்றர் இடைவெளியும் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த அறிவிப்பால் பிரித்தானியர்கள் பலர் அடுத்த இரண்டு நாட்களில் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் வானிலையிலும் வெப்ப நிலை 27C-க்கும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் வெளியில் வர தூண்டும்.

இதனால் பொலிசார் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவலை தெரிவித்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்களும், பழைய கட்டுப்பாடுகள் இருக்கும், இதனால் மக்கள் அந்த கட்டுப்பாடுகளின் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், வரும் திங்கட் கிழமை முதல் இரண்டு மீற்றர் இடைவெளியுடன் குறிப்பிட்ட விளையாட்டுகள் விளையாடவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சியின் விதிகளை மேலும் தளர்த்தியுள்ளது.

கண்டிஷனிங் மற்றும் உடற்தகுதி போன்ற தொடர்பு சம்பந்தப்படாத உடற்பயிற்சிகளுக்கு ஐந்து பேர் கொண்ட குழுக்கள் ஒன்று சேரலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குழு விளையாட்டுகளை விளையாடும் நபர்கள் ஒன்றாகப் பயிற்சியளிக்கலாம். அதுமட்டுமின்றி உடல் தொடர்பு சம்பந்தப்படாத கண்டிஷனிங் மற்றும் உடற்பயிற்சி அமர்வுகள் போன்றவற்றைச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்