சொந்த ஊரில் தன் உடலை புதைக்கனும் என்பதே கடைசி ஆசை! லண்டனில் உள்ள மகளை பார்க்க வந்த போது உயிரிழந்த தந்தை

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் கொரோனாவால் உயிரிழந்த பாகிஸ்தானை சேர்ந்த நபரின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்து அவர் மகன் வருத்தத்துடன் பேசியுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்தவர் சயித் இஸ்ரார் உல் ஹுசைன் (62). இவர் மகள் லண்டனில் வசித்து வந்த நிலையில் அவரின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து மகளை காண சயித் லண்டனுக்கு வந்தார், அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சயித் உயிரிழந்தார். ஆனால் அவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சயித் மகன் அலி ரசா கூறுகையில், சொந்த மண்ணில் தன் உடலை புதைக்க வேண்டும் என்பது தான் என் தந்தையின் கடைசி ஆசையாகும்.

முதலில் Pakistan High Commission சயித் சடலத்தை பாகிஸ்தானுக்கு கொண்டு வர ஒத்து கொண்டது.

ஆனால் பின்னர் Pakistan International Airline சடலத்தை கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டது.

அவர்களின் எல்லா நிபந்தனைகளுக்கும் நாங்கள் ஒத்து கொண்டோம்.

ஆனால் லண்டனில் உள்ள Pakistan High Commission அனுமதி வழங்கியும் Pakistan International Airline ஒத்துழைக்க மறுத்துவிட்டது, இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.

இதனிடையில் Pakistan International Airline அதிகாரி கூறுகையில், முதலில் சயித் வேறு பிரச்சனையால் இறந்தார் என நினைத்து இதற்கு ஒப்பு கொள்ளப்பட்டது.

ஆனால் கொரோனாவால் அவர் இறந்தார் என பின்னரே தெரியவந்தது.

இது ஒரு தொற்று நோய். இதுபோன்ற சடலங்களை கொண்டு செல்வதற்கு முன் பி.சி.ஏ.ஏ (பாகிஸ்தான் சிவில் ஏவியேஷன் ஆணையம்) முன் அனுமதி தேவை. மேலும், இதுபோன்ற வழக்குகளை எடுத்துச் செல்ல எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்