லண்டனில் கருப்பினத்தவரிடம் வெள்ளை நிற பொலிசார் நடந்து கொண்ட விதம்! கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் கருப்பின ஓட்டுனர் ஒருவரை வெள்ளை நிற பொலிஸ் அதிகாரி, விசாரித்து கொண்டிருக்கும் போது கை விலங்கு போடுவது போன்று வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பொலிஸ் அதிகாரி அவர் அருகில் சென்று இங்கே என்ன செய்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர் நான் சும்மா இருப்பதாகவும், நண்பருக்காக காத்திருப்பதாகவும் கூறுகிறார்.

இங்கு தான் நீ வசிக்கிறாயா என்று கேட்க, அதற்கு அந்த நபரின் பதில் திருப்தி அளிக்காத காரணத்தினால், அடையாள அட்டை இருக்கிறதா? இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளீர்களா என்று கேட்கிறார்.

மேலும் தங்களுக்கு இங்கே போதை பொருள் கையாளுதல் குறித்து தகவல் கிடைத்திருக்கிறது. நீங்கள் சொல்லும் காரணங்கள் சரியானதாக இல்லை என்று கூறி, குறித்த பெண் பொலிஸ் அதிகாரி, கை விலங்கை மாட்டுகிறார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியதால், இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 21 அன்று Lewisham-ல் ஒரு விரைவான நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், கில்பர்ட் சாலை, SE8 பகுதியில் பல நபர்களை தடுத்து வைத்தனர்.

ஏனெனில், இப்பகுதியில் போதைப்பொருள் செயல்பாடு தொடர்பாக பெறப்பட்ட உளவுத்துறையின் பேரில், ஒரு ஆண் சுமார் உள்ளூர் நேரப்படி 16.57 மணிநேரத்தில் s23 போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்துதல் சட்டத்தின் கீழ் தேடிய நோக்கத்திற்காக தடுத்து வைக்கப்பட்டார்.

அவரிடம் இருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, அந்த நபர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்