முதல் முறையாக குதிரையின் மேல் கெத்தாக பொது வெளியில் தோன்றிய பிரித்தானியா ராணி.. வெளியான புகைப்படம்

Report Print Basu in பிரித்தானியா

விண்ட்சர் கோட்டையின் மைதானத்தில் பிரித்தானியா ராணி குதிரையின் சவாரி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அவரது முதல் பொது தோற்றம் இதுவாகும்.

94 வயதான ராணி பால்மோரல் ஃபெர்ன் என்றழைக்கப்படும் 14 வயதான குதிரை இனத்தைச் சேர்ந்த ஃபெல் போனி மீது சவாரி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ராணிக்கு பிடித்த அரச குடியிருப்பான விண்ட்சரின் மைதானத்தில் அவர் தவறாமல் சவாரி செய்கிறார் என்று கூறப்படுகிறது.

விண்ட்சர் கோட்டையில், ராணி தனது கணவர், எடின்பர்க் டியூக் மற்றும் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

மார்ச் 19 அன்று பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து தனது பெர்க்ஷயர் வீட்டிற்கு பயணிக்கும் போது ராணியின் கடைசி பொது வெளியில் தோன்றிய புகைப்படம் எடுக்கப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்