பிரித்தானியாவிற்குள் நுழையும் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதி எப்போது நீக்கப்படும்? கசிந்த தகவல்

Report Print Basu in பிரித்தானியா

எதிர்வரும் மாதங்களில் பிரித்தானியாவிற்குள் நுழையும் மக்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட விதியை தளர்த்துவதற்கான வழிகளை அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியர்கள் உட்பட திங்கள்கிழமை முதல் விமானம், படகு அல்லது ரயில் மூலம் வரும் மக்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் சில எம்.பி.க்கள் மற்றும் வணிகர்கள் இந்தத் திட்டத்தில் கவலை தெரிவித்துள்ளனர், இது பயணத் துறைக்கு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர்.

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்தது.

குறைந்த தொற்று விகிதங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட விதியிலிருந்து விலக்கு அளிப்பது அல்லது 14 நாள் விதியிலிருந்து விலக்கு பெற்ற தொழிலாளர்களின் பட்டியலை விரிவாக்குவது இதில் அடங்கும்.

எந்த மாற்றங்களும் அறிவியலால் வழிநடத்தப்படும், ஆனால் விதிமுறை தளர்த்துவதற்கான திகதி ஜூலை 20 ஆக இருக்கலாம், இது பள்ளி விடுமுறைக்கு ஒத்ததாக இருக்கும் என்று பிரித்தானியா அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்