இரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்... சத்தமிட்ட கிளி: கண் விழித்த பெண் கண்ட காட்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரது கிளி பயங்கரமாக சத்தமிட்டுள்ளது.

கண் விழித்த Emma Dazeley (41) என்ற அந்த பெண், ஏற்கனவே அந்த பகுதியில் சில திருட்டுகள் நடந்திருந்ததால் உஷாராகியிருக்கிறார்.

அவர் எதிர்பார்த்ததுபோலவே, கதவுக்குப் பின்னால் ஒருவர் மறைந்திருக்க, தைரியமாக அவரைப் பிடிக்கச் சென்றிருக்கிறார் Emma.

அந்த நபர் தப்பியோட முயல, தன் மகளின் பையை அவர் திருடி வைத்திருப்பதைக் கண்ட Emma, என் மகளின் பையை எடுத்துச்செல்ல உன்னை அனுமதிக்கமாட்டேன் என்று கூறியவாறு அந்த பையைப் பிடித்து பலமாக இழுத்திருக்கிறார்.

Emma ஒரு பக்கம், அந்த திருடன் மறுபக்கம் என இழுத்ததில், அந்த பையே கிழிந்துவிட்டிருக்கிறது.

அவர் ஓட, Emma துரத்த, அந்த நபர் வேலியைத் தாண்டி குதிக்க முயல, Emma விடாமல் துரத்த, கடைசியாக விட்டால் போதும் என, திருடிய பொருட்களை போட்டுவிட்டு தப்பியிருக்கிறார் அந்த நபர்.

இந்த சம்பவம் தொடர்பாக Jake Fletcher (24) என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி Emmaவின் தைரியத்தைப் பாராட்டியுள்ளார். திருடனைப் பிடிக்க உதவியதற்காக Emmaவுக்கு 500 பவுண்டுகள் சன்மானமும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சோகமான விடயம், திருடன் வந்ததை Emmaவுக்கு தெரிவித்த கிளியான Charlie திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டது. தன் கிளியை காணாத சோகத்தில் இருக்கிறார் Emma.

Credit: Wales News Service
Credit: Wales News Service
Credit: Wales News Service

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்