வேலையை இழந்து தவித்த இளைஞன் திடீரென கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்! காதில் கேட்ட அந்த ஒரு குரல்... சுவாரசிய பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் electrician-ஆக பணிபுரிந்த நபருக்கு லொட்டரியில் £1,000,000 பரிசு விழுந்துள்ளது.

Simon Waddup (31) என்பவர் electrician தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் முதல்முறையாக EuroMillions லொட்டரி டிக்கெட் வாங்கிய அவருக்கு £1,000,000 பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் எப்போதும் பழைய சொத்துக்களை பெரியளவில் வாங்க விரும்பினேன்.

ஆனால் இதை சொன்னதற்கு என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிரித்தார்கள், ஆனால் இப்போது என்னால் அதை வாங்க முடியும்.

கடந்த 8 மாதங்களாக எனக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் என்னால் பணிக்கு செல்ல முடியவில்லை, இதனால் பணப்பிரச்சனையால் தவித்தேன்.

நான் லொட்டரி சீட்டுகளை வாங்கிய கதையே சுவாரசியமானது தான்.

கடைக்கு சென்ற போது என் காதில் ஒரு குரல் கேட்டது, அந்த குரலானது லொட்டரி டிக்கெட் வாங்கு என என்னிடம் சொன்னது.

இதையடுத்து லொட்டரி விளையாட்டில் ஈடுபட்டேன். பின்னரே எனக்கு இப்படியொரு அதிர்ஷ்டம் அடித்தது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்