அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதால் பிரித்தானியா இவ்வாறு செய்ததா? அரசு வெளியிட்ட தகவல்

Report Print Basu in பிரித்தானியா

தற்போதைய உலகளாவிய நிகழ்வுகள் காரணமாக கருப்பு மற்றும் சிறுபான்மை இன (BAME) சமூகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்த ஆய்வறிக்கை வெளியிட தாமதமாகிறது என்ற செய்திகளை பிரித்தானியா அரசு மறுத்துள்ளது.

அமைச்சர்கள் திங்களன்று முதற்கட்ட கண்டுபிடிப்புகளைப் பெற்றதாக சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அவை விரைவாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன, இந்த வாரம் இதுதொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் உலகளாவிய நிகழ்வுகள் காரணமாக இது தாமதமானது என்று சொல்வது உண்மையல்ல என குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பாக நடந்து வரும் போராட்டங்களும் இந்த ஆய்வறிக்கை சரியான நேரத்தில் வெளியிடாததற்கான காரணங்களில் ஒன்று என்று ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கருப்பு மற்றும் சிறுபான்மை இன (BAME) சமூகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்த பிரித்தானியா பொது சுகாதாரத்தின் ஆய்வறிக்கை முதலில் மே மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆய்வறிக்கை வெளியிடப்பட வேண்டும் மற்றும் BAME சமூகங்களுக்கு வைரஸின் ஏற்றத்தாழ்வான தாக்கத்தை நிவர்த்தி செய்ய இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் கோரியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்