பிரித்தானியாவில் வெள்ளை மக்களை விட கருப்பின உட்பட சிறுபான்மையினர் இறப்பது 50% அதிகம்! அம்பலமான உண்மை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் சிறுபான்மை இன சமூகங்களைச் சேர்ந்தவர்கள், வெள்ளை பிரிட்டிஷ் மக்களை விட 50% வரை கொரோனா வைரஸுடன் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அரசாங்க மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது.

அரசு நிறுவனமான பிரித்தானியா பொது சுாகதாரம் நடத்திய ஆய்வில், வைரஸ் உறுதியான வங்கதேச பாரம்பரிய மக்கள், வெள்ளை பிரிட்டிஷ் மக்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இறப்பதைக் கண்டறிந்தனர்.

வெள்ளை பிரித்தானியர்களுடன் ஒப்பிடும்போது சீன, இந்திய, பாகிஸ்தான் மற்றும் கரீபியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட பிற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களும் 10% முதல் 50% வரை இறப்பு அபாயம் அதிகம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

கருப்பின இனத்தைச் சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

1,00,000 மக்கள்தொகையில் கருப்பின பெண்களுக்கு 486 ஆகவும், கறுப்பின ஆண்களுக்கு 649 ஆகவும் நோயறிதல் விகிதம் இருந்தது. கருப்பினத்தவர்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை பெண்களுக்கு 220 மற்றும் வெள்ளை ஆண்களுக்கு 224 ஆக இருந்தது.

ஜோர்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்காவில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக ஆய்வு வெளியீடு தாமதமானது என்ற பிரித்தானியா ஊடக அறிக்கைகளை போரிஸ் ஜான்சன் அரசு மறுத்த பின்னர் இந்த ஆவணம் செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்