உலுக்கி வரும் கருப்பினத்தவரின் மரணம்! பிரித்தானியர்கள் வீட்டு வாசல் முன்பு செய்த செயல்: வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in பிரித்தானியா

அமெரிக்காவில் பொலிசாரின் மிருகத்தனத்தால் கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரித்தானியார் இன்றிரவு தங்கள் வீட்டு வாசல் முன்பு நின்று மண்டியிடும் படி பிரச்சாகக்காரர்களால் கேட்டுக் கொண்ட நிலையில், பல தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில், மினியாபோலிஸில் ஒரு வெள்ளை பொலிஸ் அதிகாரியால் கருப்பின அமெரிக்கர் George Floyd மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

அவரின் மரணத்தால், அமெரிக்காவில் போராட்டம் வெடித்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி பிரித்தானியாவிலும், அவரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

(Image: REUTERS)

இந்நிலையில் இனவெறி மற்றும் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான இந்த போராட்டத்தில், பிரித்தானிய மக்கள் இன்று இரவு தங்கள் வீட்டு வாசல் முன்பு நின்று மண்டியிடும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த ஒற்றுமையின் செய்தியை அனுப்ப மாலை 6 மணிக்கு மண்டியிட்டு தங்களுடன் இணையுமாறு பிரச்சாரகர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

தற்போது, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள போராட்டங்களில் காணப்படும் இந்த மண்டியிடும் நடவடிக்கை, அமெரிக்க கால்பந்து வீரர் கொலின் கபெர்னிக் என்பவரால் ஈர்க்கப்பட்டது. அவர் ஆகஸ்ட் 2016-இல் தேசிய கீதத்தின் போது முதன்முறையாக மண்டியிட்டார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க அவர் விரும்பியதால் இப்படி செய்தார்.

(Image: SIPA USA/PA Images)

பிரித்தானியாவின் பிரச்சார குழு (British campaign group Stand Up To Racism (SUTR)), அனைவரையும் ஒற்றுமையின் அடையாளமாக மண்டியிடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் சமூக இடைவெளி தேவை((கொரோனா வைரஸ் சமூக இடைவெளி)) என்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்காவில் காவல்துறையினரின் கைகளில் இன்னொரு கறுப்பின நபர் கொல்லப்பட்டதால் நாங்கள் கோபப்படுகிறோம்.

அமெரிக்காவில் வெளிவரும் நிகழ்வுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகால இனவெறி மற்றும் கருப்பின சமூகங்களை ஒடுக்கியதன் விளைவாகும். இதனால் எண்ணற்ற உயிர்கள் இழந்துள்ளோம்.

ஒற்றுமையுடன் எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரும், மக்களைப் பாதுகாக்க சமூக இடைவெளி(கொரோனா வைரஸ் சமூக இடைவெளி) தொலைவில் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது எங்கள் சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் சிறந்த நலனுக்காக உள்ளது. இந்த போராட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து இது ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஏராளமான மக்கள் வீட்டிற்கு வெளியேயும், வசலின் முன்பு, பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினரும் வாசல் முன்பு வந்து மண்டியிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

(Picture: @ChSupt_Ayrshire)

(Picture: @LFBBarnet)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்