லண்டனில் கருப்பினத்தவருக்கு ஆதரவாக குவிந்த மக்கள்! பொலிசாருடன் மோதல்? வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in பிரித்தானியா

அமெரிக்காவில் உயிரிழந்த கருப்பினத்தவரின் மரணத்திற்கு நீதி கிடைப்பதற்காக லண்டனில் இன்று நடைபெற்று வரும் போராட்டத்தின் போது, திடீரென்று பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டதால் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில், மினியாபோலிஸில் ஒரு வெள்ளை பொலிஸ் அதிகாரியால் கருப்பின அமெரிக்கர் George Floyd என்பவர் உயிரிழந்ததால், George Floyd-க்கு நீதி கோரியும், முறையான இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு இன்று பிற்பகல் Hyde Park-ல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கூடினர்.

அதன் பின் Black Lives Matter எதிர்பாளர்கள் என்று அழைக்கப்படும் போராட்டக்காரர்கள், பிரதமர் அலுவலகம் இருக்கும் Downing Street-ஐ நோக்கி அணி வகுத்து வந்ததால், போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(Picture: REUTERS)

இதன் காரணமாக பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு மத்திய லண்டனில் நடந்த போராட்டங்களின் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Picture: AFP via Getty Images)

அவர்கள் இருவரும் அவசரகால ஊழியரைத் தாக்கியதற்காகவும், வன்முறைக் கோளாறுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் அணி வகுத்து வந்த போது, நீதி இல்லை, அமைதி இல்லை என்று கோஷமிட்டனர்.

(Picture: AFP via Getty Images)

மேலும், அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் குறித்து, அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பை பிரித்தானியா அரசு கண்டிக்காமல் இருப்பது கண்டத்திற்குரியது என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

(Picture: AFP via Getty Images)

(Picture: AFP via Getty Images)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்