லண்டன் பேருந்தில் உடைகளை களைந்து அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட பயணி! வெளிவந்த பின்னணி தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் பேருந்தில் அநாகரீகமான முறையில் நடந்த கொண்ட ஆண் பயணி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் திகதி குறித்து தெரியவந்துள்ளது.

Newham-ல் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதன்படி லண்டன் பேருந்தில் பயணம் செய்த Dorin Prata (51) என்ற பயணி இரண்டு வெவ்வேறு தருணங்களில் தனது உடைகளை களைந்து அநாகரீகமான முறையில் மற்றவர்கள் முன்னிலையில் நடந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் Dorin-ஐ தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 1ஆம் திகதி Dorin பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பொலிசார் கூறுகையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி மற்றும் 2020 ஜனவரி 7ஆம் திகதி என இருமுறை பேருந்தில் Dorin அநாகரீகமான முறையில் மோசமாக நடந்துள்ளார்.

இதயடுத்து அவரை கடந்த மாதம் 1ஆம் திகதி கைது செய்தோம், ஏற்கனவே கடந்த 22ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அடுத்தக்கட்ட வழக்கு விசாரணைக்காக வரும் 26ஆம் திகதி Dorin நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்