பிரித்தானியாவில் இனி இது அனைவருக்கும் கட்டாயம்... 6 பேருக்கு மேல் வேண்டாம்: அரசு எச்சரிக்கை

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் ஆறு பேருக்கும் மேற்பட்டவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், மருத்துவமனைக்கு செல்லும் போது முகக்கவசம் கட்டாயமாக்கப்படுவதாகவும் நாட்டின் சுகாதார செயலாளர் மேட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்திற்கு நீதி கேட்டும், பொலிசாரின் மிருகத்தனத்திற்கு இதோடு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அங்கு மட்டுமின்றி பிரித்தானியாவிலும் ஒரு சில இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று லண்டனில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். இதன் காரணமாக பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதார செயலாளர் Matt Hancock, இந்த வார இறுதியில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம், ஆறு பேருக்கும் மேற்பட்டவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஏனெனில், கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம். கொரோனா வைரஸ் நமக்கு ஒரு உண்மையான அச்சுறுத்தலாகவே உள்ளது.

இந்த வார இறுதியில் விதிகள் கடைபிடிக்கப்படுவதற்கான முக்கிய காரணம்,.

அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இந்த கொடூரமான நோயிலிருந்து பாதுகாப்பதற்காகவே, இதனால் தயவுசெய்து உங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பிற்காக ஆறுக்கும் மேற்பட்ட நபர்களின் ஆர்ப்பாட்டங்கள் உட்பட பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம்.

வைரஸைக் கட்டுப்படுத்தவும், உயிரைக் காப்பாற்றவும் நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்மருத்துவமனைக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது இப்போது கட்டாயமாகிறது.

பார்வையாளர்கள், நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும்.

அதிகமான மக்கள் வேலைக்குச் செல்லும்போது, ​​பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்குகிறது. இதன் காரணமாக பொதுப் போக்குவரத்தில் முகத்தை மறைத்து கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாக மாறிவிடுகிறது.

இதனால், இன்று முதல் அனைத்து மருத்துவமனை பார்வையாளர்கள் மற்றும் வெளிநோயாளிகள் முகக்கவசங்களை அணிய வேண்டியிருக்கும்.

இன்னும் தொடர்ந்து இந்த நோயின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்க பெரிய பாதுகாப்பை வழங்க, நாங்கள் புதிய வழிகாட்டுதலையும் வழங்குகிறோம். இது அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் எல்லா நேரங்களிலும் பொருந்தும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்