கொரோனாவை விட பெரிய வைரஸ் இது தான்! பிரித்தானியாவில் நகர வீதிகளில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருக்கும் நகர வீதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், நீதி கிடைக்கும் வகையில், இன்று பிரித்தானியாவின் பல்வேறு நகரங்கள் போராட்டக்காரர்கள் ஒன்று கூடினர்.

நேற்று நாட்டு சுகாதார செயலாளர் மேட் ஹான்காக், இந்த வாரத்தின் இறுதி நாட்களில், அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம், ஆறு பேருக்கும் மேற்பட்டவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார்.

ஏனெனில் நாம் தற்போது வரை சுகாதார நெருக்கடியைஎதிர்கொள்கிறோம். கொரோனா வைரஸ் நமக்கு ஒரு உண்மையான அச்சுறுத்தலாகவே உள்ளதாக கூறியிருந்தார்.

ஆனால் அதை எல்லாம் உடைக்கும் வகையில், நாட்டின் பல்வேறு நகர வீதிகளில் குறிப்பாக பாராளுமன்ற சதுக்கத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அவர்கள் கருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

(Picture: Pixel8000)

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் முகக்கவசம், கையுறை மற்றும் சானிட்டைசர்களை பயன்படுத்தினர்.

இருப்பினும் சமூக இடைவெளி என்பது சாத்தியமில்லாமல் போனது. இந்த போராட்டத்தின் போது ஒரு சிலர் வைத்திருந்த பாதகைகளில், கொரோனாவை விட பெரிய வைரஸ் உள்ளது, அது இனவெறி தான் என்று குறிப்பிட்டிருந்தது.

(Picture: PA)

இன்று லண்டனின், Parliament Square-ல் உள்ளூர் நேரப்படி 1 மணிக்கும், Manchester-ன் iccadilly Gardens-ல் ஒரு மணிக்கும், Newcastle Upon Tyne-ல் இணையத்தில் 1 மணிக்கும், Leicester-ன் Clock Tower-ல் 1 மணிக்கும் Sheffield-ன் Devonshire Green மற்றும் Ipswich-ன் Town Hall-ல் 2மணிக்கும் (Black Lives Matter protests) போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

(Picture: Getty Images)

போராட்டக்காரர்கள் சிலர் தற்போது உள்துறை அலுவலகத்தின் தலைமையகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

வடக்கு லண்டனின் வாட்ஃபோர்டில் நடந்த ஒரு பேரணியில் கலந்து கொண்ட குத்துச்சண்டை வீரர் அந்தோனி ஜோசுவா ஊன்றுகோலில் நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Picture: Reuters)

(Picture: BNPS)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்