புயல், கல்மழை, வெள்ள அபாயம்: பிரித்தானியா முழுமைக்கும் மஞ்சள் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இடியுடன் கூடிய புயலும், பலத்த மழையும் பிரித்தானியா முழுவதையும் நனைத்து, கடந்த நாட்களில் ஓவனுக்குள் இருந்தது போல் காணப்பட்ட வெப்பத்துக்கு திடீர் விடுமுறை விட இருக்கின்றன.

இன்று (வெள்ளிக்கிழமை) வானிலை ஆராய்ச்சி நிலையம், பிரித்தானியா முழுமைக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடி மின்னலுடன் புயலும், கல் மழையும் வெள்ள எச்சரிக்கையும் சில இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது!

ஒரு மணி நேரத்தில் 50 மில்லிமீற்றர் மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பெரும்பகுதிகள், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி வரையிலும் இந்த எச்சரிக்கைகள் தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்