பிரித்தானியாவில் களைகட்டிய தெருவோர பார்ட்டி.. பெண்ணின் துணீகரம்: நடுங்கவைத்த இரட்டைக் கொலை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஊரடங்கு நடுவே தெருவோர பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட இரு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவராம் தொடர்பில் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கப்பட்டதாக வந்த செய்தியைத் தொடர்ந்து கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை மான்செஸ்டரில் உள்ள மோஸ் சைட் பகுதிக்கு விரைந்தனர்.

சில நிமிடங்களுக்கு பின்னர் கருப்பின இளைஞர்கள் இருவர் துப்பாகி குண்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் 36 வயதான அபயோமி அஜோஸ் மற்றும் 21 வயதான செரிஃப் டால் ஆகிய இருவரும் பரிதாபமாக மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 200 பேர் திரண்டிருந்த அந்த தெருவோர கொண்டாட்டத்தில், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்பது அரிது என குறிப்பிட்ட அப்பகுதி நபர்,

அந்த நேரத்தில் இசை வேறு காதைப் பிளக்கும் வகையில் அலறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண்மணி, தற்போது விசாரணையில் உள்ளார் எனவும், பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பொலிசாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்