பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தில் மர்ம நபர் வெறிச் செயல்... 3 பேர் பலி! அலறி அடித்து ஓடிய மக்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தில் இருக்கும் சொகுசு ஹோட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்காட்லாந்தின் Glasgow நகரில் ஸ்டெர்வெல் என்ற சொகுசு ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது.

அந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் இன்று தங்கள் வழக்கமான வேலையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஹோட்டலுக்குள் திடீரென்று கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவன் அங்கு இருந்தவர்கள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக கொலைவெறித்தாக்குதல் நடத்தினான்.

இதனால், அந்த ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தனர்.

அப்போது மர்ம நபர் அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்களை குறிவைத்து கொடூரமாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினான்.

(Picture: SNS Group)

இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற பொலிசார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபரை சுட்டுக்கொன்றனர்.

ஆனாலும், மர்ம நபர் நடத்திய இந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

(Picture: BACKGRID)

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சிலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த பகுதி முழுவதும் தற்போது பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், இப்பகுதி பக்கம் யாரும் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(Picture: SNS Group)

மேலும், இந்த ஹோட்டலில் தற்போது புகலிட கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிக தங்குவதற்கு இடம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பொலிசாரின் தொடர் விசாரணையில் அடுத்தடுத்த தகவல்கள் வெளி வரும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்