கிளாஸ்கோ தாக்குதல்தாரியை நேருக்கு நேர் எதிர்கொண்ட பொலிஸ் அதிகாரி: வெளியான முழுதகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஸ்கொட்லாந்தில் ஹொட்டல் ஒன்றில் நடந்த கொலைவெறித் தாக்குதலில் ஆயுததாரியை நேருக்கு நேர் எதிர்கொண்டு படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் உள்ளிட்ட முழுதகவல் வெளியாகியுள்ளது.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஹொட்டல் ஒன்றில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

குறித்த தாக்குதலில் ஆயுததாரியை நேருக்கு நேர் எதிர்கொண்டு பலமுறை கத்திக்குத்துக்கு இலக்கான 42 வயது பொலிஸ் அதிகாரி டேவிட் வைட் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

இவரே, தாக்குதல் நடந்த பார்க் இன் ஹொட்டலில் தகவலறிந்து முதன் முதலில் சென்றவர் என கூறப்படுகிறது.

தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரை பொலிசார் பின்னர் சுட்டு வீழ்த்தினர். சுமார் 100 புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்காலிகமாக அந்த ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

இந்த நிகழ்வு கிளாஸ்கோ மக்களையும், உண்மையில், முழு நாட்டையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது என பொலிஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி டேவிட் வைட்டின் சமயோசித நடவடிக்கையால் உயிரபாயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்