பிரித்தானியாவில் காணமல் போன 14 வயது சிறுவன் சடலமாம மீட்பு? பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் காணமல் போனதாக கூறப்பட்ட 14 சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் நம்புவதால் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

பிரித்தானியாவின் வடக்கு அயர்லாந்தில் பைக்கில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்ட 14 வயதான சிறுவன் காணமல் போய்விட்டதாகவும் பொலிசார் இவரை தேடிவருவதாகவும் செய்தி வெளியானது.

இந்நிலையில், இன்று north Belfast பகுதியில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது காணமல் போன சிறுவனின் சடலம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

(Picture: Photopress Belfast)

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Noah Donohoe என்ற 14 வயது சிறுவன், காணமல் போவதற்கு முன், இறுதியாக வடக்கு அயர்லாந்தின் north Belfast-ன் ஷோர் ரோடு பகுதியில் வார இறுதியில் காணப்பட்டார்.

அவர் south Belfast-ல் இருந்து வந்தவர் என்று கூறப்பட்டது. காணமல் போன சிறுவன், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பைக்கில் இருந்து விழுந்துள்ளார் எனவும் அதன் பின் சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் நிர்வாணமாக சைக்கிள் ஓட்டுவதைக் கண்டதாகவும் சாட்சிகள் கூறியிருந்தன.

(Picture: PA)

இதையடுத்து சிறுவனை பொலிசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று காலை north Belfast பகுதியில், இன்று காலை 9.45 மணிக்கு முன்பு காணமல் போனதாக கூறப்பட்ட Noah Donohoe-வுடன் தொடர்புடையது போன்ற சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது காணாமல் போன Noah Donohoe என்று அதிகாரிகள் நம்புகிறார்கள், இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு தங்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளனர்.

(Pictures: Photopress Belfast)

இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து தற்போதைக்கு இந்த ஒரு கூடுதல் விவரங்கள் இல்லை, இதனால் தயவு செய்து எந்த ஒரு ஊகங்களையும் யூகிக்க வேண்டாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்