பிரித்தானியாவின் இந்த நகரில் விரைவில் ஊரடங்கு!!!

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரித்தானியாவின் Leicester நகரில் விரைவில் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 16ம் திகதியிலிருந்து 658 புதிய வழக்குகள் பதிவான நிலையில் ஊடரங்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் Matt Hancock அறிவித்துள்ளார்.

ஊடரங்கு விதிப்பதற்கு முன்னதாக நகரத்தின் அனைத்து பணிகளையும் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதாகவும் அறிவித்துள்ளார்.

Leicester சான்ட்விச் தொழிற்சாலை மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஐந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மற்ற நகரங்களுக்கு பரவுவதை தடுக்கும் வண்ணம் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கன்சர்வேட்டிவ் எம்பியான Andrew Bridgen கோரிக்கை விடுத்துள்ளார்.

பலதரப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் Leicester நகரில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆராய்ந்து வருவதாக அந்நகரின் மேயர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்னும் சில நாட்களில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்