பிரித்தானிய மகாராணியாரின் விடுமுறை எஸ்டேட்டை திறந்தவெளி கழிப்பிடமாக்கிய நபர்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணியார், கோடையில் நேரத்தைச் செலவிடும் பால்மோரல் எஸ்டேட்டை திறந்த வெளிக் கழிப்பிடமாக்கிவிட்டார்கள் சிலர்!

எஸ்டேட் வழியாக செல்லும் சுற்றுலாப்பயணிகளும் மலயேற்றத்திற்கு செல்பவர்களும் எஸ்டேட்டையே திறந்த வழி கழிப்பிடமாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் மூடப்பட்டுள்ளன.

ஆகவே, அந்த வழியாக செல்வோர் அது மகாராணியாரின் எஸ்டேட் என்ற எண்ணம் கூட இல்லாமல் அங்கேயே இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.

ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட டாய்லெட் பேப்பர்கள் போடப்பட்டிருக்கும் படங்களை பால்மோரல் எஸ்டேட் நிர்வாகம், தாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தயவு செய்து கட்டிடங்கள், நீரோடைகள் ஆகியவற்றின் அருகே அசுத்தம் செய்யாதீர்கள் என மக்களை கேட்டுக்கொள்ளும் நிலைக்கு அரண்மனை ஊழியர்கள் வந்துவிட்டனர்.

பிரித்தானிய மகாராணியாருக்கு மிகவும் பிடித்த இடமாகிய பால்மோரல் எஸ்டேட்டுக்கு, ஒவ்வொரு கோடையிலும் அவர் தனது குடும்பத்தினருடன் செல்வது வழக்கம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்