எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது... பொறாமையில் கர்ப்பிணியான முன்னாள் காதலியை 21 முறை கத்தியால் குத்திய பிரித்தானியர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில் வாழ்ந்து வந்த ஒரு பெண், தனது குழந்தைக்கு தந்தையான காதலனைப் பிரிந்து வேறொருவரை காதலிக்கத் தொடங்கியுள்ளார்.

தபால் விநியோகம் செய்பவரான Kelly Mary Fauvrelle (26)க்கு மோட்டார் சைக்கிள்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

அதேபோல் மோட்டார் பைக் பிரியரான Aaron McKenzie(25) என்பவர் மீது Kellyக்கு காதல் வர, இருவரும் ஓராண்டு வரை சேர்ந்து வாழ்ந்துள்ளார்கள்.

பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படவே, Aaronஐப் பிரிந்துள்ளார் Kelly.

ஆனால், Aaronஇன் குழந்தை கெல்லியின் வயிற்றில் வளர்ந்து வந்துள்ளது. பின் தன்னுடன் பணிபுரியும் Rolander என்பவரைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார் Kelly.

Kelly தன்னை பிரிய முடிவு செய்ததை அறிந்த Aaron எவ்வளவோ கெஞ்சியும், உன் குழந்தை விடயத்தில் நான் எந்த தடையும் ஏற்படுத்தமாட்டேன், ஆனால் உன்னுடன் என்னால் வாழமுடியாது என்று கூறியிருக்கிறார் Kelly.

ஆத்திரமடைந்த Aaron யாருக்கும் தெரியாமல் Kellyயின் படுக்கையறைக்குள் நுழைந்து அவரை 21 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே Kelly உயிரிழக்க, சத்தம் கேட்டு வந்த அவரது உறவினர்கள், மருத்துவ உதவிக்குழுவினரை அழைக்க, சம்பவ இடத்தில் வைத்தே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

ஆனால் 33 வாரக் குழந்தையாகிய Riley வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டும் அவனது உயிரைக் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது.

இதற்கிடையில், கத்தியால் குத்திய Aaron, எதுவுமே தெரியாததுபோல், மருத்துவமனைக்கு வந்து Kelly குடும்பத்தினருடன் கூடவே இருந்துள்ளார்.

ஆனால், பொலிசாரின் சந்தேகம் அவர் மீது திரும்ப, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீதான குற்றத்தை அவர் மறுத்துள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்