தகனம் செய்யப்படும் உறவினரின் சவப்பெட்டியைக் கண்டு கலங்கி நின்ற குடும்பம்... பின்னர் தெரியவந்த உண்மை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தங்கள் உறவினரின் உடல் அடங்கிய சவப்பெட்டி தகனம் செய்யப்படும் அறைக்குள் சென்று மறைவதை கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு திரும்பியது அந்த குடும்பம்.

மறுநாள் சர்ரேயிலிருக்கும் Frimley Park மருத்துவமனையிலிருந்து அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்தது.

தொலைபேசியில் அழைத்தவர், அவர்களது உறவினரின் உடல் சவக்கிடங்கில் இருப்பதாக தெரிவித்தார்.

அப்படியானால், முன்தினம் தாங்கள் அடக்கத்திற்கு சென்றது யாருடைய உடல் என அந்த குடும்பம் திகைக்க, மறு பக்கம், அந்த இறுதிச்சடங்கு மையம் பதறிப்போய் தாங்கள் தகனம் செய்த உடலுக்கு உரியவரின் குடும்பத்தை அழைத்து தங்கள் தவறுக்கு மன்னிப்பு கோரியது.

நடந்தது இதுதான், உயிரிழந்தவர் கொரோனாவால் உயிரிழந்ததால், மருத்துவமனை கொடுத்த உடலை முகத்தைப் பார்க்காமலே தகனம் செய்துவிட்டனர் இறுதிச் சடங்கு மையத்தினர்.

அந்த உடல், உடலை வைக்கும் பைக்குள்ளிருந்ததால் உறவினர்களும் அவரது முகத்தைப் பார்க்கவில்லை.

சரியான உடலைக் கொடுக்கவேண்டியது மருத்துவமனையின் பொறுப்பு என இறுதிச் சடங்கு மையம் குற்றம் சாட்ட, மருத்துவமனை தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

thesun

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்