பிரித்தானியா ராணியும் டொனால்ட் டிரம்பும் தொலைபேசியில் உரையாடல்! வெளியான காரணம்

Report Print Basu in பிரித்தானியா

கொரோனா வைரஸை வீழ்த்துவது மற்றும் உலகப் பொருளாதாரங்களை மீட்டெடுப்பது குறித்து நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து பிரித்தானியா ராணியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இருவரும் எவ்வளவு காலம் எப்போது பேசினார்கள் என்பது தெரியவில்லை, ஆனால் கடந்த மாதம் தனது அதிகாரப்பூர்வ கொண்டாட்டத்திற்குப் பிறகு ராணிக்கு டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் போது இறந்தவர்களுக்கு டிரம்ப் தனது இரங்கலையும் தெரிவித்தார் என வெள்ளை மாளிகை மேலும் கூறியது.

கொரோனா ஊரடங்கின் போது ராணி பல தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார், இதில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் அடங்குவர்.

சுமுகமான வெளியுறவு என்று அழைக்கப்படும் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், பிரித்தானியாவின் நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்த உதவும் வகையில் இந்த தொலைபேசி அழைப்புகள் செய்யப்படுகின்றன என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்