இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பமான இளம்பெண்! ஸ்கேன் செய்த போது தெரிந்த நம்பமுடியாத ஆச்சரியம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கர்ப்பமாக இருந்த இளம்பெண்ணுக்கு ஸ்கேன் செய்த போது வயிற்றில் இரட்டை குழந்தை உள்ளதோடு அவருக்கு இரட்டை கருப்பை இருப்பதும் தெரியவந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kelly Fairhurst (28) என்ற இளம்பெண்ணுக்கும் அவர் காதலன் Joshua Boundy (34) மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் Kelly கர்ப்பமானார், அவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்ட போது பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

அதாவது கர்ப்பத்தில் இரட்டை குழந்தைகள் இருந்ததோடு Kellyக்கு இரட்டை கருப்பை இருப்பதும் தெரிந்தது. மேலும் இரண்டு கருப்பையில் இரண்டு குழந்தைகள் இருந்தன.

அதன்படி 50 மில்லியன் பெண்களில் ஒருவருக்கு தான் இப்படி இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Kelly கூறுகையில், ஸ்கேனில் தெரிந்த விடயம் எனக்கு பெரும் ஆச்சரியம் கொடுத்தது. இதனால் எனக்கு இரண்டு முறை பிரசவம் ஆகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது போன்ற நிலையுள்ள பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் என நிறைய படித்துள்ளதால் பயந்தேன். ஆனால் என்னை போல இரண்டு கருப்பை உள்ள பெண்ணுடன் நான் பேசினேன்.

அவர் எனக்கு தைரியம் சொன்னதோடு தனக்கு இரட்டை குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்தது என கூறினார்.

இதன்பின்னர் எனக்கு பிரசவம் தொடர்பாக பயம் போய்விட்டது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்