அமெரிக்காவை போல் பிரித்தானியா அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்..! கசிந்த தகவல்

Report Print Basu in பிரித்தானியா

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்றதைப் போலவே தினசரி தொலைக்காட்சி செய்தியாளர் சந்திப்புகளை அறிமுகப்படுத்த பிரித்தானியா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் இல்லமான டவுனிங் ஸ்ட்ரீட் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா பிரதமர் இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட், அதன் வழக்கமான கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்புகளை 92 நாட்களுக்குப் பிறகு ஜூன் 23 அன்று முடிவுக்கு கொண்டு வந்தது.

புதிய திட்டம் அக்டோபரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒவ்வொரு வாரநாட்களில் பிற்பகல் செய்தியாளர் சந்திப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேள்வி-பதில் அமர்வுகளை நடத்துவதற்கு ஒளிபரப்பாளரை நியமிக்க ஒரு போட்டி செயல்முறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்