பிரித்தானியா ‘சிவப்பு பட்டியலில்’ அமெரிக்கா..! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் ‘சிவப்பு பட்டியலில்’ உள்ள நாடுகளில் அமெரிக்கா இருக்கும் என்பதை போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அங்கிருந்து வரும் பயணிகள் கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்..

அமெரிக்கா ஆரம்ப கட்டத்திலிருந்தே பிரித்தானியாவிலிருந்து பயணித்த விமானங்களைத் தடைசெய்தது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரஸ்பர ஏற்பாடு இல்லை.

அமெரிக்காவில் தற்போது மிக அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் இருப்பதால், விமானங்களுக்கு தடை விதித்தது கொரோனா நெருக்கடியைத் தவிர்க்க அவர்களுக்கு உதவவில்லை என்று அவர் கூறினார்.

விலக்கு அளிக்கும் நாடுகளின் பட்டியலை தயாரிப்பதில் பிரித்தானியா அரசாங்கம் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்துடன் முறையாக ஆலோசிக்கவில்லை என்ற விமர்சனம் குறித்தும் ஷாப்ஸ் பதிலளித்தார்.

38 நிமிட அறிவிப்புடன் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக ஸ்காட்டிஷ் தேசிய கட்சி குற்றம் சாட்டியது.

நான்கு நாடுகளின் தலைமை மருத்துவ அதிகாரிகள் இந்த பட்டியலை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அது நடைமுறைக்கு வரும் போது, ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட நிர்வாகங்கள் கையெழுத்திடும் என்றும் ஷாப்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்