தேவாலயத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த பிரித்தானிய பெண்.. கடைசி நேரத்தில் திட்டத்தை நிறைவேற்றாமல் போன காரணம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனைச் சேர்ந்த ஒரு பெண், சென்ற ஆண்டு தேவாலயம் ஒன்றை தகர்க்க திட்டமிட்டிருந்த நிலையில், தான் எதனால் தனது திட்டத்தை நிறைவேற்றவில்லை என்பதன் காரணத்தை தனது தோழி ஒருவரிடம் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பத்தின் அன்பின் காரணமாக இஸ்லாம் மதத்தைத் தழுவிய Safiyya Amira Shaikh (37), பின்னர் தீவிரவாத கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்.

ஐ.எஸ் அமைப்பில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்ட முதல் பிரித்தானிய பெண் என கருதப்படும் Safiyya, பிரித்தானியாவிலுள்ள புனித பவுல் தேவாலயத்தில் குண்டு வைத்து பலரைக் கொல்வதோடு, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கட்டிடத்தை இடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

அதற்காக ஒன்லைனில் பெண் ஒருவரை தொடர்பு கொண்ட Safiyya, வெடிகுண்டுகள் வாங்குவது தொடர்பாக அவருடன் பேசியதோடு, அவரை நேரில் சந்தித்து குண்டுகள் வாங்குவதற்காக பை ஒன்றையும் ஒப்படைத்துள்ளார்.

ஆனால், உண்மையில் அந்த பெண், மாறுவேடத்திலிருந்த ஒரு ரகசிய பொலிசார். கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டிருக்கும் Safiyya, தான் தேவாலயத்திலும், தான் தங்கியிருந்த ஹொட்டலிலும் குண்டு வைக்க திட்டமிட்டதாகவும், மனித வெடிகுண்டாக மடிய முடிவு செய்ததாகவும், ஆனால், கடைசி நேரத்தில் பயம் ஏற்பட்டதால் வெடிகுண்டு வைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால், தற்போது தனது தோழி ஒருவரிடம் சிறையிலிருக்கும் தொலைபேசியை பயன்படுத்தி பேசிய Safiyya, தான் கூறியது உண்மையில்லை என்றும், தான் கடுமையான போதையில் இருந்ததால் தன்னால் நேரத்திற்கு தூக்கத்திலிருந்து எழ முடியவில்லை எனவும், அதனால்தான் குண்டுவைக்க இயலாமல் போனது என்றும் கூறியுள்ளார்.

தேவாலயம் மற்றும் ஹொட்டலுக்கு குண்டு வைக்க திட்டமிட்ட வழக்கில், இன்று Safiyyaவுக்கு குறைந்த பட்சம் 14 ஆண்டுகள் சிறையில் செலவிடவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்