லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம்... விளையாட்டு மைதானம் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட 20 வயது இளைஞன்!

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டி 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Islington-ல் இருக்கும் Roman Way பகுதியில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்துள்ளனர்.

ஆனால், பொலிசார் அவரை காப்பாற்ற முயல்வதற்குள் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Credit: Twitter/@AlpsLifee

பிற்பகல் 3 மணிக்குப் பிறகு, அங்கிருக்கும் விளையாட்டு மைதானம் அருகே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Credit: Twitter/@AlpsLifee

பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தை நேரில் கண்ட எவரும், வீடியோ அல்லது புகைப்படங்கள் இருந்தால், அது பொலிசாருக்கு உதவியாக இருக்கும் என்பதால், அப்படி எதுவும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படியும், குற்றங்களைத் தடுக்கவும் கண்டறியவும் உதவுவதில் பொதுமக்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Credit: Twitter/@AlpsLifee

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்