பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த இரட்டையர்கள் நாடு கடத்தல்?

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த இரட்டையர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு நாடு கடத்தப்படவிருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் பிறந்தவர்கள் Darrell and Darren, இவர்களது சிறு வயதிலேயே தாய் இறந்துவிட தந்தையும் இல்லாமல் போக, மாமாவின் அரவணைப்பில் வளர்ந்துள்ளனர்.

இவர்களது தாய்- தந்தைக்கும் பிரித்தானியா குடியுரிமை இல்லை, இந்நிலையில் 13 வயதாக இருக்கும் போது மாமாவின் உடல்நிலை மோசமாக காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு மற்றவர்களை அடித்து துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட Darrell and Darren கடந்த 6 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தண்டனை காலம் முடிந்த பின்னர் Darrell தந்தை பிறந்த நாடான Dominicaவுக்கும், Darren தாயின் பிறந்த நாடான Grenadaவுக்கும் நாடு கடத்தப்படவுள்ளனர்.

24 வயதே ஆகும் நிலையில் எதுவும் தெரியாத நாட்டுக்கு தங்களை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இவர்களின் சகோதரி, என் அண்ணன்களை நாடு கடத்துவது என்பது இனவெறியே.

பிரித்தானியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமகன்களே, ஆனால் அதற்காக அவர்கள் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

கடுமையான மற்றும் கொடூரமான இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து Petition கையெழுத்திடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்