பிரித்தானியர்களுக்கு ஆளுக்கு 500 பவுண்டுகள் மதிப்பிலான Voucherகள் வழங்கும் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது (சிறுவர்களுக்கு 250 பவுண்டுகள்).
கொரோனா பாதிப்பால் சுருண்டு கிடக்கும் பொருளாதாரத்தை மீண்டும் தட்டி எழுப்புவதற்காகத்தான் இந்த திட்டம்.
Resolution Foundation என்னும் ஆலோசனை அமைப்பு இந்த திட்டத்தை முன்வைத்துள்ளது. இதேபோன்ற திட்டங்கள் சீனா, மால்ட்டா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் வெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை சேன்ஸலர் ரிஷி சுனக் ஏற்றுக்கொள்ளூம் பட்சத்தில், இந்த Voucherகள் விநியோகம் துவங்கும்.
அவை, EVoucher-கவோ கூட வழங்கப்படலாம் என்பதால் மொபைல் போன்களை பயன்படுத்தி கூட நீங்கள் அந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஓராண்டு காலம் வரை பயன்படுத்தக்கூடியவையாக இருக்கும் இந்த Voucher-களை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சில துறைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதாவது, கடைகள், உணவகங்கள், ஹொட்டல்கள் ஏன் மதுபான விடுதிகளில் கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தால் அரசுக்கு 30 பில்லியன் பவுண்டுகள் செலவாகும். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திட்டம் கூடியமட்டும் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.