லண்டனில் விதியை மீறிய மக்கள்... 3,000 க்கும் மேற்பட்டோரை அதிரடியாக தடுத்து நிறுத்திய அதிகாரிகள்: முழு பின்னணி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா தலைநகரில் முகக்கவசம் அணியாத 3,000 க்கும் மேற்பட்டோர் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளவிடாமல் தடுத்து நிறுத்தி லண்டன் போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கடந்த மாதம் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மேலும் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு 100 பவுண்ட் அபராதம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் பல பயணிகள் இன்னும் விதிகளை மீறி வந்த நிலையில், கடந்த வாரத்தில் காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அமலாக்கத்தை முடுக்கிவிட்டனர்.

பல பயணிகள் லண்டனில் பொது போக்குவரத்தில் - குறிப்பாக பேருந்துகளில் முகக்கவசம் இல்லாமல் பயணிப்பதை பார்த்ததாக பலர் தெரிவித்தனர்.

விலக்கு அளிக்கப்படாத எல்லோரும் பொது போக்குவரத்தில் முகத்தை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என லண்டன் போக்குவரத்தில் (டி.எஃப்.எல்) இணக்கம், காவல்துறை மற்றும் தெரு சேவைகளின் இயக்குநர் சிவான் ஹேவர்ட் கூறினார்:

காலையில் பரபரப்பான நேரத்தின் போது 90% வாடிக்கையாளர்கள் கட்டுப்பாட்டுக்கு இணங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஏராளமான பயணிகளுக்கு முறையான விலக்கு கிடைக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். அது வெளிப்படையாக இருக்காது.

காவல்துறை மற்றும் டி.எப்.எல்-ன் அமலாக்க அதிகாரிகள் இணக்கத்தை ஊக்குவிக்க முழுவதும் முன்னுரிமையான பஸ் மற்றும் இரயில் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்,

முகக்கசவம் அணியாதவர்களை நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி வெளியேறும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.

மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் வழக்குத் தொடர வாய்ப்பு உள்ளதால் அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் உள்ளன, தேவைப்பட்டால் அவர்கள் அவற்றைப் பயன்படுத்துவார்கள்.

இது ஒரு கடைசி முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் எங்கள் அமலாக்க அதிகாரிகள் முதலில் இணக்கத்தை அதிகரிக்க மற்ற உத்திகளை பயன்படுத்துகிறார்கள்.

மேலும் லண்டன் மக்கள் சரியானதைச் செய்ய விரும்புவதால் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்